×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொசுத்தொல்லை அதிகரிப்பு

வருசநாடு, டிச. 15: கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, கண்டமனூர், மயிலாடும்பாறை, வருசநாடு குமணன்தொழு, தும்மக்குண்டு ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரமாக மழை பெய்து வந்தது.

இதனால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், ‘கொசு ஒழிப்பு மருந்தால், கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. குடியிருப்பு அருகே மழைநீர், கழிவுநீர் தேங்காமலும், தேவையற்ற செடி கொடிகளை அப்புறப்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியம் தரும் புகைமூட்டம் மூலம் விரட்டலாம். குழந்தைகள், முதியோர்களை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு